கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர்...
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் - 2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வவல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2) உமக்கொப்பானவர்...
2. து}தர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2) உமக்கொப்பானவர்...
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
என்றும் அற்புதம் செய்திடுவீர் உமக்கொப்பானவர்...
****************
உன் புகழைப் பாடுவது - என்
வாழ்வின் இன்பமய்யா
உன்னருளைப் போற்றுவது - என்
வாழ்வின் செல்வமய்யா
1. துன்பத்திலும் இன்பத்திலும் - நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் - நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் - நீ
என்றும் அணைத்திருப்பாய்
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபையிது ..கிருபையே
சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபையிது ..கிருபையே
ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபையிது ..கிருபையே
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்...
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
அடைக்கலமே உமதடிமை நானே...
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே
2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே
4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே
5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே
சோர்ந்து போகாதே என் நண்பனே....
கடும் புயல் வரினும் காற்று வீசினும் நீ கலங்காதே மனமே (2)
இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (both 2)
2) என் ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் (2)
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் (2)
- இயேசு உன்னை..
3) நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)
மனம் கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார் (2)
- இயேசு உன்னை..
***********************
உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) - வாழ்க ராஜா
2) யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) - வாழ்க ராஜா
3) ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2)
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)
********************
யெகோவா தேவனுக்கு....
யெகோவா தேவனுக்கு அநேக நாமங்கள் எதைச் சொல்லிப் பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் அநேகம் கரம் தட்டிப் பாடிடுவேன் (both 2)
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃபா (both 2) - யெகோவா தேவனுக்கு..
1) எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணிர் எனக்குத் தந்து தாகம் எல்லாம் தீர்த்தீரையா (both 2) - யெகோவா ஷாலோம்..
எபினேசரும் நீங்கதாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க (both 2) - யெகோவா ஷாலோம்..
இம்மானுவேல் நீங்கதாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவேங்க (both 2) - யெகோவா ஷாலோம்..
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை...
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)
உம்மை அம்மானும் கூப்பிடவா
1) கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும் - உம்மை அப்பானு கூப்பிடவா...
2) என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும் - உம்மை அப்பானு கூப்பிடவா...
சுத்த ஆவி என்னில் தங்கும்...
1) சுத்த ஆவி என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே
பாவ அழுக்கெல்லாம் நீக்கும் உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும்
2) சத்திய ஆவி என்னில் தங்கும் நானும் சத்தியன் ஆகவே
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே
நீர் என்னில் பிரவேசியும் ஆண்டு கொள்ளும் நித்தமும்
3) நேச ஆவி என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே
துர்ச்சுபாவம் போகப்பண்ணும் அன்பில் நான் வேறூன்றவே
அன்பின் சுவாலை எழுப்பும் மென்மேலும் வளர்த்திடும்
4) வல்ல ஆவி என்னில் தங்கும் நானும் வல்லோன் ஆகவே
சாத்தான் என்னை தூண்டிவிடும் போது ஜெயங்கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும் என்னைப் பெலப்படுத்தும்
5) நல்ல ஆவி என்னில் தங்கும் நானும் வல்லோன் ஆகவே
பகை மேட்டிமை விரோதம் மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன் என்னை சீர் படுத்துமேன்
6) தெய்வ ஆவி என்னில் தங்கும் நானும் உம்மில் தங்கவே
மோட்ச பாதையில் நடத்தும் இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும் என்னை முற்றும் ரட்சியும்
****************
அருள் ஏராளமாய்ப் பெய்யும்...
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
1) அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
2) அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்
3) அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்
****************
காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி வா நீ
1)முள்ளும் பதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தே தேடுகிறார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகின்றாய்
2)சுத்த இதயம் வேண்டா மென்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லவோ
ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ
3)என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னைத் தாங்கி பயம் நீக்குவார்
4)துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய்
5)எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா
****************
ஐயையா நான் வந்தேன்...ஐயையா நான் வந்தேன் – தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
1)துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் – தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
2)உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று – நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
3)எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ – இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
4)ஏற்றுக்கொண்டு மன்னிப்பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
5)மட்டற்ற உம் அன்பினாலே தடை ஏதும்
மாறி அகன்றதுவே – இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
****************
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
1)பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
2)இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
****************
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
1)வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
2)சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
3)இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
4)ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
5)பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
6)அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
7)பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
****************